» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடல் உறுப்பு தானத்தில் கின்னஸ் சாதனை படைக்கும் தமிழகம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

திங்கள் 11, பிப்ரவரி 2019 1:08:33 PM (IST)

உடல் உறுப்பு தானத்தில் கின்னஸ் சாதனைப் படைத்து, தமிழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமையவுள்ளன. 

மேலும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை என, இந்தியாவில் ஏற்கனவே முன்னோடி மாநிலமாக நல்வாழ்வுத்துறை உள்ளது. 

உடல் உறுப்புகள் தானத்தில் 4வது வருடமாக முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதில் நாம் கின்னஸ் சாதனை படைத்துள்ளோம். வெளிப்படை தன்மையை உறுதி செய்வதுடன், உடல் உறுப்புகள் தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறோம் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory