» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்காது : பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்

சனி 9, பிப்ரவரி 2019 8:47:38 PM (IST)

தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ஒவ்வொரு முறையும் பிரதமரின் வருகையின் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் எனவே பிரதமரின் வருகையைஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்குவதாக அவர் கூறினார். பாஜக அரசு மீது விமர்சனங்களை வைக்க முடியாத எதிர்கட்சிகள் ரபேல் என்ற செத்த குதிரையை வைத்து அரசியல் செய்வதாகவும் பிரதமரை விமர்சிக்க மமதா பானர்ஜிக்கு என்ற தகுதியும் இல்லை . தமிழகத்தில் கூட்டணி அமைத்து தான் போட்டி என பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறிய அவர் கமலஹாசன் ஆறு மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர் என்பதால் பாஜக ஆட்சியை மதிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

கண்ணன்Feb 10, 2019 - 01:25:04 PM | Posted IP 162.1*****

என்னாது..? என்னாது? தேர்தலையே சந்திக்காதா...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory