» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யாரை ஏமாற்ற கண்டனம்? இந்துக்களே உஷார்: மு.க.ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா கண்டனம்

சனி 9, பிப்ரவரி 2019 4:04:06 PM (IST)

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலைக்கு 4 நாட்களுக்குப்பிறகு கண்டனம் தெரிவித்த ஸ்டாலினை மக்கள் நம்ப வேண்டாம் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா  குற்றம்சாட்டியுள்ளார்.
 
மதமாற்றத்தை கண்டித்த காரணத்தால் கும்பகோணத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் "கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்! இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்" என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இதற்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, "இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம். இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே. 4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory