» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிப்பு

புதன் 9, ஜனவரி 2019 1:08:34 PM (IST)

வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர், அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்குவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.விசாரணையின் போது, எந்த நோக்கத்துக்காக பணக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. கட்சிப் பணம் என்றால் எந்த கேள்வியும் கேட்க மாட்டோம், அரசின் நிதி என்பதால்தான் கேள்வி எழுப்புகிறோம் அரசின் நிதி என்றால் கேள்வி எழத்தான் செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.அரசின் கொள்கை முடிவு தவறாக இருந்தால் நீதிமன்றம் தலையிடும் .

பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் போய் சேர வேண்டும் என்பதை வகைப்படுத்தியப் பிறகே திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும் . வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும், வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க தடை விதிப்பதாகவும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை அனைவருக்கும் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory