» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென தீ விபத்து: அதிர்ஷ்வசமாக பயணிகள் உயிர்தப்பினர்

திங்கள் 10, டிசம்பர் 2018 12:43:16 PM (IST)மதுரையில் இருந்து நேற்றிரவு பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து, முற்றிலும் நாசமானது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

மதுரையில் இருந்து நேற்றிரவு பெங்களூருக்கு புறப்பட்ட கே.பி.என். நிறுவனத்தின் ஆம்னி பேருந்தில், 36 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். மதுரையில் இருந்து ராஜா என்பவர் பேருந்தை ஓட்டிய நிலையில், சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் என்பவர் பேருந்தை இயக்கத் தொடங்கினார். நள்ளிரவு சுமார் 3 மணியளவில், தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின்பக்க எஞ்சினில் இருந்து, புகை வந்துள்ளது. இதை கண்ணாடி வழியாக பார்த்த ஓட்டுநர் மாதேஷ், உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளை இறக்கினார். நல்ல உறக்கத்தில் இருந்த பயணிகள் பதற்றத்துடன் வேகமாக கீழே இறங்கினர். ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் லேசாக தீப்பிடித்ததால், அது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். சுமார் முக்கால் மணி நேரத்துக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், எஞ்சின் பகுதியில் தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுக்குள்கொண்டு வந்தனர். இதனிடையே, மற்றொரு பேருந்தில், பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தின் குளிர்சாதனப் பெட்டியில் தீப்பிடித்து சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால், பேருந்து முழுமையாக எரிந்தது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory