» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு

சனி 8, டிசம்பர் 2018 8:16:57 PM (IST)நடிகர் கஞ்சா கருப்பு இன்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து  அதிமுகவில் இணைந்து கொண்டார்.

நடிகர் கஞ்சா கருப்பு பிதாமகன் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். கிராமப்புற பின்னணி கொண்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து 2வது கதாநாயகனாக அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் நடித்திருந்தார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார்.  இந்த சூழலில் முதலமைச்சர் பழனிசாமியை இன்று சந்தித்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துக் கொண்டார். இதுதொடர்பாக அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory