» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்சியில் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தாய் பலி ; மகளுக்கு தீவிர சிகிச்சை

வியாழன் 6, டிசம்பர் 2018 8:26:55 PM (IST)

திருச்சியில் கடன் பிரச்சனை காரணமாக தாயும், பெண்ணும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

திருச்சி கே.கே.நகர் களத்து வீடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வெள்ளையம்மாள் (30). இவர்களுக்கு மித்ரா என்ற மகள் இருக்கிறாள். ஏராளமானோரிடம் முருகானந்தம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கினாராம் அதனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்துள்ளனர். 

இதனால் வெள்ளையம்மாள் தனது கணவரிடம் விரைவாக கடனை திருப்பிச் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் அவர் கடனை அடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த வெள்ளையம்மாள், தனது மகள் மித்ராவுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் உயிரிழந்தார். சிறுமி மித்ராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory