» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல் நிலையத்தில் பாஜக.,வினர் அரை நிர்வாண போராட்டம் : நெல்லையில் பரபரப்பு

வியாழன் 6, டிசம்பர் 2018 6:26:25 PM (IST)



திருநெல்வேலி சந்திப்பில் ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கர் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக தலைவர் தயாசங்கர் தலைமையில் அக்கட்சியினர் நின்றனர். பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமமுகவினரும் அங்கு வந்தனர்.

பாஜகவினரை இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அவர்களை அனைவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதையறிந்த பாஜகவினர் காவல் நிலையம் முன் திரண்டு கைது செய்தவர்களை உடனே விட வேண்டுமென காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பாஜகவினரை அவதூறாக பேசி கைது செய்ததாக இன்ஸ்பெக்டர் வனசுந்தரை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் அம்பேத்கர் படத்துடன் காவல்நிலையத்திற்குள் அரை நிர்வாண போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory