» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீலகிரி மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது: பிரதமருக்கு முதல்வ‌ர் பழனிசாமி கடிதம்

வியாழன் 6, டிசம்பர் 2018 4:35:18 PM (IST)

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய உருளைகிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட அந்த ஆய்வு மையத்தில் தமிழகம் மட்டுமின்றி தென்மாநில விவசாயிகளும் பயன்பெறுவதாக கூறியுள்ளார். நோய் தாக்குதலுக்கு இலக்காகாத உருளைகிழங்கு விதைகளை உருவாக்கும் இந்த மையத்தை மூட மத்திய விவசாயத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த மையம் மூடப்பட்டால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வு மையத்தை தென்மாநில விவசாயிகள் நாட வேண்டியது இருக்கும் என்றும், ஜலந்தர் ஆய்வு மையம் உருவாக்கும் உருளைக்கிழங்கு ரகம் தென் மாநிலங்களுக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் நீலகிரி ஆய்வு மையம் மூடும் முடிவு கைவிட விவசாயத்துறை அமைச்சக்கத்தை பிரதமர் வலியுறுத்த வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory