» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வியாழன் 6, டிசம்பர் 2018 1:58:51 PM (IST)

நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திறகும், வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய நெல் ஜெயராமன் அவர்கள் இன்று (6.12.2018) காலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஜெயராமன் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான வேளாண் பெருமக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் நெல் ஜெயராமன் ஆற்றிய சிறப்பான சேவையினை, தமிழ்நாடு அரசு அங்கீகரித்து பாராட்டும் விதமாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட 14.11.2018 அன்று நான் உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஆகியோர் 5 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கினார்கள்.

விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய ஜெயராமனின் மறைவு தமிழ் நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory