» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் : மத்திய சுகாதாரத்துறை

வியாழன் 6, டிசம்பர் 2018 1:34:29 PM (IST)

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்று உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது.

மதுரையைச் சோ்ந்த கே கே ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தொடா்ந்தாா். அந்த மனுவில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எப்போது தொடங்கும், எப்போது முடிவடையும், தற்போது மருத்துவமனை தொடா்பான புதிய தகவல்கள் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தாா். இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவமனைக்கான வரைபடம் உட்பட திட்டம் தொடா்பான அறிக்கை மத்தயி நிதித்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவை தற்போது மத்திய நிதிக்குழுவில் பரிசீலனையில் உள்ளது. நிதிக்குழு ஒப்புதலுக்குப் பின்னா் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 45வது மாதத்தில் இருந்து மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory