» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைக்கவசம் அணியாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

வியாழன் 6, டிசம்பர் 2018 1:26:11 PM (IST)

புயல் பாதிப்பு பணிகளை பாா்வையிடச் சென்ற போது மோட்டார்பைக்கில் தலைக்கவசம் அணியாமல் சென்ற அமைச்சா் விஜயபாஸ்கருக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்தை சேதத்தை சந்தித்தன.  புயல் பாதிப்புகளை பாா்வையிடச் சென்றபோது அமைச்சா் விஜயபாஸ்கா் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமா்ந்தபடி பயணித்ததாக கூறப்படுகிறது. 

டிராபிக் ராமசாமி இதுகுறித்து உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அதில், அமைச்சா் விஜயபாஸ்கா் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமைச்சா் விஜயபாஸ்கா் டிசம்பா் 17ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory