» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரு கணவர்களை உதறிவிட்டு 17 வயது சிறுவனுடன் செக்ஸ்: இளம்பெண் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

வியாழன் 6, டிசம்பர் 2018 11:03:25 AM (IST)

சென்னையில் இரு கணவர்களையும், குழந்தைகளையும் உதறி தள்ளிவிட்டு  17 வயது சிறுவனை கடத்தி செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 28 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் லாக் நகரை சேர்ந்தவர் சவிதா என்ற வசந்தி (28). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வாழ்ந்து வந்தார். 2-வது கணவர் பெங்களூருவில் வேலை பார்க்கிறார். வசந்தி தனது 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் 17 வயது சிறுவனுடன் வசந்திக்கு காதல் ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது உறவினரை பார்க்க சென்றபோது, வசந்தி அந்த 17 வயது சிறுவனை சந்தித்தார். 

பார்த்தவுடன் காதல் மலர்ந்தது. வசந்தி தனது 2-வது கணவரையும் தூக்கி வீசிவிட்டு, தனது குழந்தைகளையும் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த 17 வயது சிறுவனோடு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். சிறுவனை பல ஊர்களுக்கு அழைத்து சென்று வசந்தி உல்லாசமாக சுற்றி திரிந்துள்ளார். சிறுவனின் பெற்றோர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வசந்தியிடம் இருந்து தங்கள் மகனை மீட்டு தருமாறு புகாரில் பெற்றோர் தெரிவித்திருந்தனர். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி விசாரணை மேற்கொண்டார். 

போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வெளியூரில் சுற்றி திரிந்த வசந்தியையும், சிறுவனையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். 17 வயது சிறுவனை காதல் வலையில் விழவைத்து, தனது ஆசையில் சிக்கவைத்து தனது இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக வசந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வசந்தி நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 17 வயது சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து

தமிழன்Dec 8, 2018 - 05:44:28 PM | Posted IP 172.6*****

நியாயமான செயல்.. . இந்த மாரி கேஸ்கள் நிறைய போடவேண்டும்.. காமவெறி பிடித்த பெண்களை காப்பாற்றும் நோக்கில் ஆண்கள் மீது ரப்பே கேஸ் போடுவது நியாயமல்ல..

நிஹாDec 8, 2018 - 03:17:49 PM | Posted IP 162.1*****

"பார்த்தவுடன் காதல் மலர்ந்தது" என்பதற்கு பதில் "பார்த்தவுடன் காமம் கிளர்ந்த்தது" என்று சொல்லியிருக்கலாம். காதல் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தாமல் விட்டிருக்கலாம்.

அருண்Dec 7, 2018 - 04:53:35 PM | Posted IP 192.8*****

//தனது இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக சரியான பதிவு ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory