» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமரை விமர்சிப்பதை வைகோ நிறுத்திக்கொள்ள வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் அறிவுரை

செவ்வாய் 4, டிசம்பர் 2018 6:01:17 PM (IST)

வைகோ பிரதமரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமரைப் பற்றிப் பேசும் போது சற்று நிதானமுடன் பேசவேண்டும், யாரையோ திருப்திப்படுத்த அவர் இவ்வாறு பேசுகிறார். தமிழகத்தில் பிரதமரை அனுமதிக்க மாட்டோம் கருப்புக் கொடி காட்டுவோம் என்றெல்லாம் பேசுகிறார்.

பிரதமர் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார். நீங்கள் முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள். துரைமுருகன் போன்றவர்கள் கூட்டணி குறித்து என்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்கிற நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டுள்ளது என்றால். கேட்கவே வேடிக்கையாக உள்ளது. திமுகவில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஏளனமாகப் பார்க்கும் நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. வேண்டா விருந்தாளியாக மதிமுக உள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  


மக்கள் கருத்து

இவன்Dec 4, 2018 - 06:30:30 PM | Posted IP 172.6*****

பொய் வாயன் பொறி உருண்டா . இந்தியாவில் பல கோடி பேர் எதிர்க்கிறார்கள் .. போயா ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory