» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கஜா புயல் பாதிப்பு: நாகை, திருவாரூரில் முதல்வர் ஆய்வு எப்போது? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

செவ்வாய் 20, நவம்பர் 2018 5:51:55 PM (IST)

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூரில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை வேறொரு நாளில் முதல்வர் ஆய்வு செய்வார் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கன மழை பெய்து வருவதால் திருவாரூர், நாகையில் புயல் பாதிப்புகளை பார்வையிட இருந்த தமிழக முதல்வர் பழனிசாமியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து இன்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புயல் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டனர்.

விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தும், நிவாரண உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். அங்கிருந்து புயல் கடுமையாக பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும் சென்று சேத பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. கன மழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குச் சென்று கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட முடியாமல்முதல்வர் பழனிசாமி  திருச்சி திரும்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory