» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி: தமிழகத்தில் 19ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு

சனி 17, நவம்பர் 2018 4:02:49 PM (IST)

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற 19-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை என இரு பருவ காலங்களை கொண்டது. தென்மேற்கு பருவமழை அரபிக்கடல் வழியாகவும், வடகிழக்கு பருவ மழை வங்கக்கடல் வழியாகவும் உருவாகிறது. தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால் தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். அக்டோபர் தொடங்கி டிசம்பர் முடிய வங்கக்கடலில் உருவாகும் புயல்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகளால்தான் வட தமிழகத்தில் மழை பெய்யும்

வங்கக்கடலில் பெரும்பாலும் மலாய் தீபகற்ப பகுதியில் இருந்து வரும் மேலடுக்கு சுழற்சியானது அந்தமான் கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியுடன் இணையும்போது காற்றழுத்த தாழ்வு நிலைகளும் புயல்களும் உருவாகின்றன.அதுபோல கஜா புயலும் மலாய் தீபகற்பத்தில் இருந்து வந்த மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து புயலாக மாறியது.

கஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது 19, 20-ம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். 21-ந்தேதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வருகிற 19-ம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதைப் பொருத்து மழை தீவிரம் அடையும். 21-ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் நாளையும், நாளை மறுநாளும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory