» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடன்குளத்தில் 5, 6வது அணு உலை பூர்வாங்க பணிகள் : விஞ்ஞானிகள் நேரில் பார்வை

சனி 17, நவம்பர் 2018 3:47:16 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை இந்திய அணுசக்தி கழக அதிகாரிகள் மற்றும் ரஷ்ய நாட்டைச்சேர்ந்த அணுசக்திதுறை விஞ்ஞானிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் 3 மற்றும் 4- வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 6- வது அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கு இடத்தேர்வு , உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் இந்த பணிகளை இன்று இந்திய அணுசக்தித் துறை தலைவர் கே.என்.வியாஸ், இந்திய அணுசக்திகழகத் தலைவர் எஸ்.கே.சர்மா , ரஷ்யநாட்டின் சேர்ந்த அணு உலை உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் லிகாஷேவ்அலெக்சி, லிம்ரான் கோசேவ் மற்றும் இந்திய ரஷ்யநாட்டைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானிகள் குழுவினர் 5 , 6 வது அணு உலை அமைப்பதற்காக நடந்து வரும் பூர்வாங்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து 3 மற்றும் 4- வது அணு உலைகளுக்கான பணிகளையும் , 1 வது இரண்டாவது அணு உலையின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory