» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இனி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வுகள் நடைபெறாது: அரசு தேர்வுகள் அறிவிப்பு

சனி 17, நவம்பர் 2018 11:38:20 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் (2019-20) மார்ச்- ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு மற்றும் ஜூன்-ஜூலை மாதங்களில் பருவ சிறப்பு துணைத்தேர்வு ஆகிய தேர்வுகள் மட்டும் நடத்தப்படும்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் துணைத்தேர்வுகள் இனி நடத்தப்படாது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சமீபத்தில் ஆணை வழங்கியுள்ளது. எனவே வரும் கல்வி ஆண்டு முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வுகள் நடத்தப்படாது. தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச்-ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், ஜூன்-ஜூலை சிறப்பு உடனடித்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அரசாணையின்படி செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் துணைத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், ஜூன்-ஜூலை பருவத்தில் நடத்தப்படும் உடனடி சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory