» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடுரோட்டில் இளைஞர் பெட்ரோல் ஊற்றிக் கொலை : மதுரையில் பரபரப்பு சம்பவம்

புதன் 7, நவம்பர் 2018 2:07:53 PM (IST)
மதுரையில் விருந்துக்கு சென்று திரும்பியபோது நடுரோட்டில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மதுரை அடுத்த பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22), வருச்சூரில் தனது நெருங்கிய நண்பர் வீட்டுக்கு கறிவிருந்துக்காக மோட்டார்பைக்கில் சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நண்பர்களுடன் வீடு திரும்பியுள்ளார். மதுரை- சிவகங்கை சாலையில் விளத்தூர் எனும் இடத்துக்கு அருகே பைக்கில் அரவிந்த் வந்துகொண்டிருக்கும்போது, இரு சொகுசுக் கார்களில் வந்த மர்மக் கும்பல் ஒன்று நடுரோட்டில் வழிமறித்துள்ளது. அப்போது, அந்தக் கும்பல் இரும்பு ஆயுதங்களைக் கொண்டு அரவிந்த்தைக் கொடூரமாக வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளது.

பின்னர் அந்தக் கும்பல்,மோட்டார் பைக்கிலிருந்து பெட்ரோலை எடுத்து அரவிந்த் மீது ஊற்றி எரித்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கருப்பாயூரணி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரவிந்த்தின் சகோதரர் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பத்தப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory