» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து வருகிறது : ஸ்டாலின் தகவல்

ஞாயிறு 21, அக்டோபர் 2018 11:41:46 AM (IST)

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து வருகிறது என மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை  கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து வருகிறது .அன்பழகனுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவரை பார்க்க திமுக தொண்டர்கள் வரவேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory