» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய வாலிபர் கைது

வியாழன் 18, அக்டோபர் 2018 2:15:23 PM (IST)

சென்னையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை, கடித்து குதறியவர் கைது செய்யப்பட்டார். 

சென்னை திருவொற்றியூரில் நேற்று இரவு சாலையோரத்தில் மூர்த்தி என்ற இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு வாலிபர். மூர்த்தியை கடித்துள்ளார். இதில் வலி தாங்காமல் மூர்த்தி கதறினார். அவரது கதறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மூர்த்தியை மீட்டனர். 

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போதை ஆசாமியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் ஜதிதீ என்பதும், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.  அவரை கைது செய்த போலீசார், புழல் மத்தியசிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory