» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் : அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

வியாழன் 18, அக்டோபர் 2018 1:15:04 PM (IST)

மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரை, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
 
கரூரில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில், ஈழத்தமிழர் படுகொலைக்கு அப்போது மத்தியில் கூட்டாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், திமுக கட்சிகளே காரணம் என்றும் ஈழப் போரின் வெற்றிக்கு அப்போதைய இந்திய அரசு துணையாக இருந்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமிழ் இயக்க உணர்வாளர்கள் யாராவது பேசினார்களா? மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரை, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என கூறினார். 


மக்கள் கருத்து

ஒருவன்Oct 19, 2018 - 09:39:13 AM | Posted IP 162.1*****

போங்கய்யா .. மிஸ்டர் பொய் உருண்டை

தமிழன்Oct 18, 2018 - 11:03:52 PM | Posted IP 162.1*****

பாஜக கட்சியை பற்றி தமிழர்களுக்கு தெரியும்டா பொறி உருண்டை. ராஜபக்ஷவை கூப்பிடுவந்து ராஜா மரியாதையை கொடுத்தது உன் அரசு, அப்போ உனக்கு என்ன அருகதை இருக்கு ஈழ பிரச்சனையா பத்தி பேச. தேர்தல் வருதுன்னா ரொம்ப தமிழ் உணர்வு உங்களுக்கு வந்திருமே... ஒக்ச்சி புயல் வந்தப்ப மேற்படி அமைச்சர் வெளிநாட்டில் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது..

ஏ.ராஜாOct 18, 2018 - 02:05:28 PM | Posted IP 162.1*****

உண்மை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory