» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்பார் : மத்திய அமைச்சர்

வெள்ளி 12, அக்டோபர் 2018 12:44:57 PM (IST)

மதுரையில் விரைவில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில்  விரைவில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். தமிழக மக்கள் பயனடையும் வகையில் தமிழக அரசுடன் கை கோர்த்து அனைத்து சுகாதார திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும் நட்டா தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory