» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வியாழன் 11, அக்டோபர் 2018 7:42:58 PM (IST)

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இவற்றுக்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து நவம்பர் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகளும் மற்ற மாவட்டங்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும் என 20 ஆயிரத்து 567 பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட உள்ளது. அதே போன்று பண்டிகை முடிந்து திரும்ப சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு 4 ஆயிரத்து 207 பேருந்துகளும், பிற இடங்களுக்கு 7 ஆயிரத்து 635 பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory