» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆா். பெயா் சூட்டப்பட்டது

புதன் 10, அக்டோபர் 2018 1:37:11 PM (IST)

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயா் சூட்டப்பட்டு பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆா்.நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பெயா் சூட்டப்படும் என்றும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தாா்.அதன்படி இன்று கோயம்பேடு புறநகா் பேருந்து நிலையத்தில் புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். என்ற பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory