» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை: விழுப்புரம் அருகே பரபரப்பு
புதன் 10, அக்டோபர் 2018 10:22:47 AM (IST)
விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில், தனது காதலி சரஸ்வதி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கார்த்திவேல் என்ற காவலர் தானும் தற்கொலை செய்து கொண்டார். கார்த்திவேல் சென்னையில் காவலராக பணி புரிந்து வருகிறார். கார்த்திவேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, எம்.பி.பி.எஸ் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
மருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்ற போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சத்திய மங்கலத்தைச்சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் அன்னியூரைச்சேர்ந்த சரஸ்வதியை காதலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)

கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி? 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:40:52 AM (IST)

ஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
சனி 23, பிப்ரவரி 2019 10:36:47 AM (IST)

இந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:54:01 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)
