» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமராக மாேடி, தமிழக முதல்வராக ரஜினிகாந்த் :துாத்துக்குடியில் அர்ஜூன்சம்பத் விருப்பம்

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 7:46:34 PM (IST)
தமிழக முதல்வராக நடிகர் ரஜினிகாந்த் வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.

துாத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் இந்து மத அமைப்புகள் எதற்கும் பாதுகாப்பு இல்லை.  இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் நோக்கில் ஆறு பேர் கொண்ட கும்பல் ஊடுருவினார்கள். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக போலீசாருக்கு வாழ்த்துகள். நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும். தமிழக முதல்வராக ரஜினிகாந்த் வர வேண்டும். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய மாநில அரசு ஜி எஸ்டி க்குள் கொண்டுவர வேண்டும். தமிழக சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பத்திரிக்கைகளில் வந்த பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அங்கு இருந்துதான் வெளியில் இருபவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். தாமிரபரணி புஷ்கர விழா நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களிலும் தடையே மீறி நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆப்Sep 26, 2018 - 05:52:17 PM | Posted IP 141.1*****

இவரெல்லாம் ஒரு ஆளு .

மக்கள்Sep 26, 2018 - 04:08:59 PM | Posted IP 141.1*****

விளங்காத கூமுட்டைகள்

ராமநாதபூபதிSep 26, 2018 - 09:54:42 AM | Posted IP 141.1*****

அடேங்கப்பா இது போல ஊருக்குள்ள இன்னும் எத்தனை பேரு இருக்கான்னு தெரியலையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory