» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை : திருச்சியில் இந்திரா பானர்ஜி வேதனை

சனி 22, செப்டம்பர் 2018 6:23:14 PM (IST)

தமிழகத்தில் பெண்களுக்கு பாகாப்பு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்று பேசுகையில்,ஆண் பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. நாட்டில் இயற்கை வளங்கள் அதிகயளவில் சரண்டப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகயளவில் நடைபெறுவதாக வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இவை நீடித்த வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல்முறை என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory