» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாதவன் கொலை மிரட்டல்; தீபா உயிருக்கு ஆபத்து: கமிஷனர் அலுவலகத்தில் டிரைவர் ராஜா புகார்!

சனி 22, செப்டம்பர் 2018 5:37:23 PM (IST)

தீபா உயிருக்கு  பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக டிரைவர் ராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இதில் அவரது நண்பரும் கார் டிரைவருமான ராஜாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருந்தார். இதனால் தீபா, அவரது கார் டிரைவர் ராஜா மற்றும் கணவர் மாதவனுக்கு இடையே பிரச்சினை எழுந்தது. மாதவனுக்கும் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சனை தொடர்ந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ராஜாவை கட்சியிலிருந்து நீக்கினார் தீபா.

இந்நிலையில் டிரைவர் ராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் மாநில செயலாளராக இருந்து வரும் நான் தீபாவின் குடும்ப நண்பர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறேன். கட்சியில் கிளை பதவி முதல் மாவட்ட செயலாளர்கள் பதவிகள் உட்பட அனைத்திற்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த குறிப்பிட்ட சிலர் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தூண்டுதலில் தீபாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அதன் காரணமாக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 

இதன் காரணமாக தீபாவின் கணவரும் கட்சியில் உள்ள சிலரும் என் மீது கோபம் அடைந்தனர். அதன் விளைவாக சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பேரவை மற்றும் கழகத்தின் எந்த பணிகளையும் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் எனக்கு பாதுகாப்பு வழங்கவும், தீபாவிற்கு பாதுகாப்பு அறனாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் டிரைவர் ராஜா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory