» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சனி 22, செப்டம்பர் 2018 3:27:05 PM (IST)

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க  என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory