» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாவட்டஅணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு : தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

புதன் 15, ஆகஸ்ட் 2018 12:20:58 PM (IST)கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டஅணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம், கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. வள்ளியூர், தென்காசி, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டஅணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக ளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அது போல்  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 272 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 187 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை காரணமாக களக்காடு தலையணையில் குளிக்க தடையும், திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வாகனங்கள் மற்றும் பக்தர்கள் செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory