» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ளம் வந்தால் எதிர்கொள்ள மீட்புக்குழு தயார் : திருநெல்வேலி மாவட்டஆட்சியர் பேட்டி

புதன் 15, ஆகஸ்ட் 2018 12:16:21 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை, வெள்ளம் வந்தாலும் எதிர்கொள்ள மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது என நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் 72 வது சுதந்திர தினவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தேசியகொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதை யை ஏற்று கொண்ட பின் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள அபாயம் இல்லை. ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் குளிக்கவோ, தண்ணீர் அருகே செல்லவோ வேண்டாம். 

ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்பை, பாபநாசம், பாளையங்கோட்டை, நெல்லை ஆகிய 4 தாலுக்காகளில் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவேளை வரும் பட்சத்தில் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பேரிடர் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory