» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மழையால் குற்றாலம்அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

புதன் 15, ஆகஸ்ட் 2018 10:13:34 AM (IST)மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கன மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு  இடங்களில் வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியிலும் கன மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றிலும் வெள்ளம் சீறி பாய்ந்ததால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை பார்த்து ஆறுதல் அடைந்தனர். பலர் சிற்றருவி, புலியருவி சென்று குளித்தனர். அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிற்றாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

நேற்று காலையில் இருந்து  மழை விட்டு விட்டு தொடர்ந்ததால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரித்தது. பழையகுற்றால அருவிக்கு செல்லும் பாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. படிக்கட்டுகளில் வெள்ளநீர் பாய்ந்தோடியது கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. மெயின் அருவியில் முதல் பாலத்தை தொட்டுக் கொண்டு வெள்ளம் சீறி பாய்கிறது. இதனால் அருவியை நெருங்க முடியாத நிலை உள்ளது. குற்றாலநாதர் கோவிலைச் சுற்றியும், சன்னதி பஜாரிலும் வெள்ளம் பாய்ந்தோடியது. அருகில் இருந்த தற்காலிக கடைகளையும் வெள்ளநீர் சூழ்ந்தது.செங்கோட்டை குண்டாறு அணை, மேக்கரை அடவிநயினார் அணை ஆகியவை ஏற்கனவே நிரம்பி விட்டன. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே மறுகால் வழியே வெளியேறியது. கேரளாவில் வெள்ளப் பாதிப்பு இருப்பதால் புளியரை வழியே கேரளாவிற்கு வாகனங்கள் செல்வது பெரும் அளவு குறைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory