» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் குவிந்த பக்தர்கள் : ஆடிஅமாவாசை வழிபாடு

சனி 11, ஆகஸ்ட் 2018 12:05:03 PM (IST)



ஆடிஅமாவாசையையொட்டி பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர். 

நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில், தாமிரபரணி நதி பாயத்துவங்கும் இடத்தில் காரையாறு வனப்பகுதியில் சொரிமுத்தையனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிஅமாவாசை விழா விமரிசையாககொண்டாடப்படுகிறது. இன்று நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து திரளானவர்கள் வந்திருந்தனர். 

அங்கேயே குடில் அமைத்து சமையல் செய்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து வழிபாடுகள் நடத்துகின்றனர். பக்தர்கள் பொங்கலிட்டு சொரி முத்தைய னாரையும், சங்கிலி பூதத்தாரையும் வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory