» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம் !!

சனி 11, ஆகஸ்ட் 2018 11:38:06 AM (IST)

விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரத்தில்  அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக  இருந்த கணேசன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் அண்மையில் அம்பலமானது.  தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக  விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 400 கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரத்தில்  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்  கணேசனுக்கும் தொடர்பு  உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பதிவாளராக  இருந்த கணேசன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணை வேந்தர்  சூரப்பா  பிறப்பித்தார். மேலும் கணேசனுக்குப் பதிலாக அண்ணா பல்கலைக்கழக பததிவாளராக  ஜெ.குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory