» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 8:30:42 PM (IST)

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாகவும், மேலும் கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory