» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தலைவர் கருணாநிதியை கெளரவப்படுத்தி அமுல் நிறுவனம் கார்டூன் வெளியீடு

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 1:20:50 PM (IST)
திமுக தலைவர் கருணாநிதியை கௌரவிக்கும் வகையில் அமுல் நிறுவனம் கார்டூன்வரைபடத்தோடு வெளியிட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை 6. 10 மணியளவில் காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடந்து நேற்று மாலை 4 மணியளவில் அவரது உடல் ராஜாஜி அரங்கிலிருந்து மெரினாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் அமுல் நிறுவனம் கருணாநிதியை கௌரவிக்கும் வகையில் கார்டூன் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் அமுல் சிறுமி கலைஞருக்கு கைகொடுப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில்தமிழ் தலைவர் என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இதை தனது டுவிட்டர் பக்கத்தில் அமுல் நிறுவனம் பதிவிட்டுள்ளது . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory