» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரமடையும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

சனி 21, ஜூலை 2018 8:34:49 PM (IST)

இந்தியா முழுவதும் நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரமடை யுமென லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது..

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணமாக ரூ. 18,000 கோடியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிா்ணயிப்பதோடு, ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனச் செயலா் தனராஜ் கூறுகையில்.மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள் உள்ளன. இதில் 3 லட்சம் லாரிகள் 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரிகள் திரும்பி வந்ததால், இன்று சனிக்கிழமை காலை முதல் மேலும் 1 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.நாளை (ஞாயிறு) காலை முதல் எஞ்சிய 50,000 லாரிகளும் நிறுத்தப்படும். இதன் மூலம் இனி வரும் நாள்களில் போராட்டம் தீவிரமடையும் என்றாா்.

இதனை பொதுமக்கள் உணா்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் அனைத்து வகையான வாகனங் களையும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சாலையில் இயக்காமல் நிறுத்திவைத்து, லாரி உரிமையாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory