» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் முதல்முறை, பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோ : கும்பகோணத்தில் அறிமுகம்

சனி 21, ஜூலை 2018 7:12:17 PM (IST)பாதாளசாக்கடையை சுத்தம் செய்யும் ரோபோ கும்பகோணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாதாளசாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை தமிழகத்தில் மனிதர்கள் செய்கின்றனர். இருப்பினும் துர்நாற்றத்தினால் மூச்சுதிணறி இறப்பது,நோய்கள் தாக்குதலால் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபாே கும்பகோணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே, முதன் முதலாக இந்த ரோபோவை கும்பகோணத்தில் நகராட்சிகளின் ஆணையர் பிரகாஷ் அறிமுகப்படுத்தி இயக்கி வைத்தார். 

மனிதர்கள் இறங்கி  பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதை தவிர்க்க கேரளாவில் ரோபோ இயந்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதை பின்பற்ற தமிழக நகராட்சிகள் இயக்குனரகம் முடிவு செய்து, இந்த இயந்திரத்தை கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory