» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா, சசிகலா மீதான வரிமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது : உயர் நீதிமன்றம் உத்தரவு

சனி 21, ஜூலை 2018 5:33:17 PM (IST)

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு எதிரான வருமான வரி வழக்கில் சமரசம் ஏற்பட்டுவிட்டதால், அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் 94ம் ஆண்டு வரை வருமான வரிக் கணக்கை  சமர்ப்பிக்கவில்லை என மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரித்துறை,  எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தது. எழும்பூர் பொருளாதார குற்றவியல்  நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2004ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு வருமான வரி கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அபராத தொகையையும் செலுத்தி விட்டதாக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் அளித்த உத்தரவில், எழும்பூர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியதையும், அபராதத்தை செலுத்தியதையும் ஏற்றுக்கொண்டு அந்த வழக்குகளை வருமான வரித்துறையினர் வாபஸ் பெற்றுள்ளனர். அதனால், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு செல்லத்தக்கது இல்லை என்பதால் ஜெயலலிதா, சசிகலா, சசி எண்டர்பிரைசஸ் ஆகியோரின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory