» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது என்ன? வகுப்பறை மோதல் வீடியோ வெளியாகி பரபரப்பு!!

சனி 21, ஜூலை 2018 5:18:08 PM (IST)

கயத்தாறில் மாணவர்களிடையே ஏற்ப்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானது. சாதாரண வார்த்தை சண்டை மோதலாக உருவாகி மாணவர் உயிரிழக்கும் பரிதாபம் நேர்ந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 16-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே நடந்த சம்பவம் மாணவர் ஒருவரின் உயிரிழப்பில் முடிந்தது. வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் நடந்துள்ளது. இக்காட்சி பள்ளி அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் மோதலில் ஈடுபடும் மாணவர்களிடையே ஒரு மாணவரை வலுவாக இருக்கும் இன்னொரு மாணவர் கழுத்தைப் பிடித்து அழுத்தும் காட்சியும்,  இதனால் வெகுண்டெழுந்த மாணவர் அந்த மாணவரை திரும்பத் தாக்குகிறார். 

இதனால் கோபமடைந்த அந்த மாணவர் தன்னைத் தாக்கும் மாணவரை ரெஸ்லிங் பாணியில் தனது தோளுக்கு மேல் தூக்கி தரையில் ஓங்கி அடிக்கிறார். இதில் அருகில் உள்ள பெஞ்சில் தலை மோதியதாலும், தரையில் வேகமாக அடிக்கப்பட்டதாலும் மாணவர் மயக்கமானார். இதைப்பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த மாணவரை சோதித்தனர். மயக்கத்தில் இருந்த மாணவர் இறந்து விட்டதாகக் கருதி, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் உயிரிழக்கவில்லை அதிர்ச்சியில் மயக்கமாகி உள்ளார் எனத் தெரிய வந்தது. சிகிச்சைக்குப் பின் மாணவர் மயக்கம் தெளிந்தார். இதனிடையே, மாணவரை மற்ற மாணவர்கள் தூக்கிச் செல்லும்போது எவ்வித ரியாக்‌ஷனும் காட்டாத, தாக்குதல் நடத்திய மாணவர் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற பின்னர் வகுப்பை விட்டு வெளியேறிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அவ்வாறு வெளியேறிய மாணவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் வீட்டுக்குத் திரும்பாததால் மாணவர் பயந்துபோய் எங்காவது சென்றுவிட்டாரோ என்று அவரது வீட்டில் உள்ளவர்கள் தேடினர். ஆனால் அதிர்ச்சியூட்டும் விஷயமாக அந்த மாணவர் பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன்னால் தாக்கப்பட்ட நண்பன் இறந்து போனதாக நினைத்து சிறைக்குச் செல்லவேண்டுமே என பயந்துபோய் அந்த மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

மாணவனைக் கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர் என்று அவரது உறவினர்கள் புகார் அளித்ததால் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே உண்மை தெரியவரும் . இதனிடையே மாணவர் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாதாரண விளையாட்டில் நடந்த தாக்குதல் உயிரையே பறிக்கும் அளவுக்கு விபரீதமாகியுள்ளது. பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்த போது ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.


மக்கள் கருத்து

நிஹாJul 21, 2018 - 07:10:17 PM | Posted IP 162.1*****

என்ன மாதிரியான செய்தி இது? ஸ்க்கூல் பெயரை போடமுடியவில்லையா? இதே உங்களுக்கு பிடிக்காத பள்ளி என்றால் பெயரை போடுவீர்களா? இதற்கு முன் சில செய்திகளில் நீங்கள் பள்ளியின் பெயரை போட்டதுண்டு. டுட்டி ஆன்லைன் மீது வெறுப்பு உண்டாக்குகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory