» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை

புதன் 18, ஜூலை 2018 12:01:15 PM (IST)

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா(32).  இவர், சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், பிரியங்கா தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரியங்காவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், பிரியங்கா தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி உள்ளாரா என்று போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory