» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை சீரழித்த மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: நடிகர் பார்த்திபன் ஆவேசம்

புதன் 18, ஜூலை 2018 10:34:40 AM (IST)

சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று நடிகர் பார்த்திபன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமியை அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த 17 பேர் 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. இந்த சம்பவத்தற்கு திரையுலகினர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கஸ்தூரி 

12 வயது சிறுமிக்கு தாயான கஸ்தூரி சென்னை சம்பவம் குறித்து அறிந்து பேரதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளார். அந்த 17 பேரும் ஆட்கள் இல்லை முகங்கள் இருக்கும் ஆணுறுப்புகள் என்கிறார்.

விஷால்

பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை எனும் சட்டம் கொண்டு வர இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். சென்னையில் 17 பேர் சேர்ந்து அப்பாவி சிறுமியை பலாத்காரம் செய்ததை அறிந்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன் என்று நடிகர் cவிஷால் ட்வீட்டியுள்ளார்.

குஷ்பு

சிறுமியை சீரழித்த 17 பேரை தாக்கியது தவறு தான் என்றாலும் மக்களின் உணர்வு நியாயம் தான் என்கிறார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory