» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை மாற்ற விரைவில் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன் 18, ஜூலை 2018 10:20:40 AM (IST)

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து  2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ஆலய வழிபாடு நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் ஆஜராகி, விதிமீறல் கட்டிடங்களை இடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை கள் குறித்து விளக்கினர்.

பிறகு நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியதாவது: விதிமீறல் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தா லும், அதிகாரிகள் அதை செயல் படுத்துவது இல்லை. எனவே, இதுவரை அமல்படுத்தப்பட்ட, அமல்படுத்தப்படாத உத்தரவுகள் எத்தனை என்று 2 அதிகாரிகளும் அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரியை மாற்றி அமைப் பது குறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதை பரிசீலித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் 2 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை, சென்னையின் விரிவாக்கத்துக்கு ஏற்ப சொத்து வரி மாற்றி அமைக்கப்படவில்லை. அடுக்குமாடிகள் பெருகிவிட்ட சென்னையில் அதற்கேற்ப கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் இல்லை. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் கழிவுநீர் சுத்தி கரிப்பு தொட்டிகள் அமைக்க தனியாக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி, சிஎம்டிஏ, கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமீறி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து தனியாக வலைதளம் ஏற்படுத்தி ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்த வேண்டும். விதி மீறல் கட்டிடங்களை ஆரம்பத்தி லேயே தடுக்க ஏன் தனியாக சிறப்பு படைகளை உருவாக்கக்கூடாது? இதுதொடர்பாக 2 அதிகாரிகளும் பதில் அளிக்க வேண்டும்.விதிமீறல் கட்டிடங்களுக்கு எவ்வாறு மின்இணைப்பு வழங் கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அடுத்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், நுங்கம் பாக்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு இடையூறாக வழிபாடு நடத்து வதை ஏற்க முடியாது. அந்த ஆக்கிரமிப்புகளை போலீஸாரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரி கள் அகற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory