» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பல்கலைகழகங்களில் ஊழல் நடப்பதாக கூறுவது தவறு : அமைச்சர் அன்பழகன் பேட்டி

வியாழன் 12, ஜூலை 2018 5:57:06 PM (IST)பல்கலைகழகங்களில் ஊழல் நடப்பதாக கூறுவது தவறான தகவல் என உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்
  
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நூறு அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றும் விழா மற்றும் பல்கலை கழக சுற்று சுவர் திறப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் பல்கலைகழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது தேசிய அளவில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2020 ஆண்டில் இந்திய அளவில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை முப்பது சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஆனால் தற்போதே தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் அளவு 46.9 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கலைகழகங்களில் ஊழல் நடைபெறுவதாக கூறுவது தவறான தகவல். பேராசிரியர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது  அதில் அவர்கள் பல்கலை கழக முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் தவறான தகவல்களை வெளியிட கூடாது.  மருத்துவ கலந்தாய்வு காலதாமத்தால் பொறியியல் கல்லூரி திறப்பது கால தாமதமாக வாய்ப்புள்ளது என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ லட்சுமி,கடம்பூர் ராஜீ நெல்லை மாவட்டஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory