» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமண்டல தேர்தல் களத்தில் டி.எஸ்.எப்.துரைராஜ் : ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

வியாழன் 12, ஜூலை 2018 9:42:17 AM (IST)தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் டி.எஸ்.எப்.டி. துரைராஜ் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஒய்.எம்.சி.ஏ. கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் 6 சபை மன்றங்கள், 106 சேகர மன்றங்கள் உள்ளன. திருமண்டலத்திற்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கான 4வது பொதுத் தேர்தல் தேதி கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்ற திருமண்டல செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் 2003ல் திருநெல்வேலி திருமண்டலத்தில் இருந்து பிரிந்து புதிய திருமண்டலமானது. அப்போது புதிய திருமண்டலத்தை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் டி.எஸ்.எப். அணி வெற்றி பெற்று திருமண்டலத்தை நிர்வகித்தது.

பின்னர் 2006ல் நடைபெற்ற திருமண்டல முதல் பொது த்தேர்தலிலும் டி.எஸ்.எப். அணியினரே வெற்றி பெற்றனர். 2011ல் நடைபெற்ற 2வது பொதுத் தேர்தலில் அப்போதைய பேராயர் ஜெபச்சந்திரன் ஆதரவுபெற்ற டி.மோகன்ராஜ் அருமைநாயகம் லே செயலாளரானார். 2014ல் நடைபெற்ற 3வது திருமண்டல பொதுத்தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியினர் வெற்றி பெற்று நிர்வாகத்தைக் கைப்பற்றினர். 2018ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கான 4வது பொதுத் தேர்தல் திருமண்டல செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு அதற்கான  தேர்தல் கால ஒழுங்குகளும் 106 சேகர தலைவர்க ளுக்கும் அனுப்பப்பட்டது.

அதன்படி ஜுன் 17ம் தேதி திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள், சேகரமன்ற பிரதிநிதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து பல்வேறு தேர்தல்கள் நடத்தப்பட்டு ஆகஸ்ட் 22,23 ஆகிய தேதிகளில் திருமண்டலப் பெருமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர் பட்டியல் கடந்த ஏப்ரல் 22ம்தேதி அனைத்து சேகரங்களிலும் வெளியிடப்பட்டது. இதில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடக்கூடிய பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. 

இது தொடர்பாக சிலர், தேர்தல் விசாரணைக்குழுவிடம் முறையீடு செய்தனர். அதிலும் பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த திருமண்டல தேர்தலில் தற்போதைய "லே” செயலாளர் எஸ்.டி.கே.ராஜன் அணியில் எஸ்.டி.ஆர்.தர்மராஜ் மற்றும் மோகன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். அந்த அணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணி சார்பில் டி.எஸ்.எப். டி.பால்பாண்டி போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியினர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர். அந்த அணியிலிருந்த எஸ்.டி.ஆர்.தர்மராஜ் மற்றும் மோகன் ஆகியோர் இந்த முறை டி.எஸ்.எப்.அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.  

டி.எஸ்.எப்.அணி சார்பில் இந்த முறை டி.துரைராஜ் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில் டி.எஸ்.எப். டி.துரைராஜ் என்பவருக்கு கிருஷ்ணராஜபுரம் சேகரத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து துரைராஜ் உள்ளிட்ட 4 பேர் மதுரைஉயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில் துரைராஜ் உள்ளிட்ட 4 பேரையும் அவர்களது சேகரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்று திருமண்டல தேர்தல் அலுவலர் மற்றும் பேராயருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தர விட்டது. ஆனால் அதையும் தற்போதைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் காலதாமதம் செய்ததால் அவரால் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ய முடியவில்லை.

இதனையடுத்து டி.எஸ்.எப். டி.துரைராஜ் உள்பட 4 பேர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மீண்டும் முறையிட்டனர். அதில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து,தேர்தலில் போட்டியிட அனுமதிக்கா ததால் தேர்தலில் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுவிட்டது. எனவே கோர்ட் உத்தரவை மதிக்காத திருமண்டல நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.அதில் ஜுன் 18ம் தேதி வரை திருமண்டல தேர்தல் நடத்த பேராயர் மற்றும் தேர்தல் கன்வீனருக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. முந்தைய உத்தரவை பின்பற்றாத தேர்தல் கன்வீனருக்கும், பேராயருக்கும் நீதிமன்றம் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது. 

மேலும் 19ம் தேதி வரை தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டுமென்று இடைக்காலத் தடை விதிப்பதாக கூறி வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள் ளிவைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி ஜூன் 17ம்தேதி திருமண்ட தேர்தல் நடைபெறாது என திருமண்டல பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் அறிவித்தார். ஆனால் பேராயர் தேவசகாயம் திட்டமிட்டபடி அனைத்து சேகரத்தலைவர்கள் மூலம் தேர்தலை நடத்தினார். இதனை எதிர்த்து டி.எஸ்.எப். டி.துரைராஜ், ஆனந்தராஜ், ஸ்டேன்லி வேதமாணிக்கம், ஆரோன் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். 

இந்தவழக்கை விசாரணை நடத்திய நீதிபதி முரளிதரன் கடந்த 4ம் தேதி அளித்த தீர்ப்பில் ஏற்கனவே நீதி மன்றம் வழங்கிய உத்தரவின்படி மனுதாரர்களுக்கு வாக்கு உரிமையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் காலதாமதப்படுத்தியதால் அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை உருவாக்கி விட்டனர் என்று நீதிமன்றத்தில் அவர்கள் 4 பேரும் பேராயர் மற்றும் பொருளாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த னர். அதில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில் ஜூன் 17ம் தேதி நடந்த‌ தேர்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது. 

ஆனால் அதனையும்மீறி பேராயர் தேர்தலை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பேராயருக்கு 15 நாள் சிவில் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதம் விதித்ததோடு திருமண்டலை தேர்தலை ரத்து செய்தும், மீண்டும் தேர்தல் அட்டவணை வெளியிட்டு தேர்தலை நடத்த ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இ.எம்.கே.சித்தார்த்தன் தேர்தல்அதிகாரியாக செயல்படுவார். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ஆறுமுகம் துணைத் தேர்தல் அதிகாரியாக இருந்து திருமண்டல சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவார்கள். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தேவையான பாதுகாப்பு வழங்கவும், மாவட்ட நீதிமன்றம் தேர்தலை கண்காணிக்கவும் உத்தவிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் பணிகளை இரண்டு மாதத்தில் தொடங்கவும் நீதிபதி முரளிதரன் தனது உத்தரவில் கூறியுள்ளார். பேராயரும், பொருளாளரும் மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக சிவில் சிறைத்தண்டணையை நிறுத்தி வைத்து நீதிபதி முரளிதரன் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இந்த தண்டனைக்கு மேல்முறையீடு செய்ததில் உயர் நீதிமன்ற பெஞ்ச் இருவருக்கும் அளிக்கப்பட்ட தண்டனைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டுள்ளதால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக களம் காண திருச்சபை மக்கள் தயாராகிவிட்டனர். இவர்களுக்கு எதிரணியாக தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளராக டி.எஸ்.எப். டி.துரைராஜ் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஒய்.எம்.சி.ஏ. கூட்ட அரங்கில் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் டி.எஸ்.எப். டி.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தூத்துக்குடி சபை மன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டேன்லி வேதமாணிக்கம், பிரேம்குமார், நாசரேத் சபை மன்றத்தைச் சேர்ந்த ஏ.எம். விஜயராஜா, மோசஸ் கிருபைராஜ், சாத்தான்குளம் சபைமன்றத்தைச் சேர்ந்த காந்திராஜன், சாயர்புரம் சபை மன்றத்தைச் சேர்ந்த ஆலயமணி, சாலமோன், ஜார்ஜ்,  சிவாஜி, இ.திலகர், சாத்ராக், காலேப், அருள் பிரகாஷ், சிசில் இன்பராஜன், சுதாகர், பாலசுந்தர் உள்பட அனைத்து சபைமன்றங்களில் இருந்தும் டி.எஸ்.எப். அணியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சபைமன்ற அளவில் டி.எஸ்.எப். அணியினர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி திருமண்டல தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

SelvaJul 15, 2018 - 07:02:35 PM | Posted IP 141.1*****

Anandaraj fraud also 40 lakhs taken from diocese

JoseJul 13, 2018 - 06:47:01 PM | Posted IP 162.1*****

வெற்றி பெற்றவர்கள் இந்த கூட்டத்தில் உள்ளார்கள் டம்மி jose அவர்களே...

CSIJul 13, 2018 - 05:07:22 PM | Posted IP 172.6*****

All the best ...

JoseJul 13, 2018 - 04:33:12 PM | Posted IP 162.1*****

இந்த கூட்டத்தில் இருப்பவர்களில் யாராவது திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்களா? அத்தனைபேரும் 100 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்கள்தான்

JoseJul 13, 2018 - 10:32:38 AM | Posted IP 162.1*****

PPR Augustin என்கின்ற பெயரில் கருத்து தெரிவித்து இருக்கின்ற நண்பரே நீங்கள் அகஸ்டின் அண்ணன் அல்ல என்பது நன்கு தெரியும். இவ்வளவு பேசுகின்ற நீர் தைரியம் இருந்தால் உங்களது உண்மையான பெயரை பதிவிட்டு கருத்து கூறவும். இவ்வாறு கீழ்த்தரமான செயலை செய்யும் உமக்கு அடுத்தவர்களை குறை கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது...

kingJul 12, 2018 - 10:19:23 PM | Posted IP 162.1*****

good news

PPR AUGUSTINJul 12, 2018 - 07:55:07 PM | Posted IP 162.1*****

இது தேர்தல் கூட்டம் அல்ல . இது கலவாணி கூட்டம் . இந்த அணியின் தலைவர் திரு .D.S.F.துரைராஜ் அவர்கள் 3 . 5 கோடி ரூபாய் திருமண்டல மக்கள் காணிக்கை பணத்தை கையாடல் செய்ததுக்காக முன்னாள் பேராயர் Rt.Rev.JAD .ஜெபசந்திரன் அவர்களால் திருமண்டலத்தைவிட்டு நீக்கப்பட்டார் . அதேபோல் இடையன்விளை விஜயராஜா மாட்டுப்பண்ணையில் 12 லட்சம் கையாடல் செய்தார் இப்படி கலவாணிகல் கூட்டம் இது

Thilakar, NazarethJul 12, 2018 - 04:48:01 PM | Posted IP 172.6*****

First and last meeting for DSF Team, all the best for Diocesan H.Raja @ விஜயராஜா

GiftsonJul 12, 2018 - 12:54:38 PM | Posted IP 162.1*****

God will give us good success.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory