» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎல் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதன் 11, ஜூலை 2018 3:29:56 PM (IST)

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3வது சீசன் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த தொடரில் இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2 வீரர்களை சேர்த்துக்கொள்ள கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிமாநில வீரர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த முடிவை எதிர்த்து டிஎன்பிஎல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வெளிமாநில கிரிக்கெட் சங்கங்களில் இடம்பெற்றுள்ள வீரர்கள், அந்தந்த சங்கங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கொடுத்தால் டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று டிஎன்பிஎல் வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு பிசிசிஐ வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தன


மக்கள் கருத்து

மனிதன்Jul 11, 2018 - 07:31:02 PM | Posted IP 172.6*****

அப்போ IPL ல மட்டும் எதற்கு வெளி நாடு வீரர்கள்? மனிதன்

உண்மை சொல்பவன்Jul 11, 2018 - 05:06:31 PM | Posted IP 162.1*****

நாட்டுக்கு கிரிக்கெட் தேவையில்லாதது .. எல்லாம் பயித்தியம், சூதாட்டம்தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory