» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் ப.சிதம்பரம் வீட்டில் திருடியதாக இரு பணிப்பெண்கள் கைது

செவ்வாய் 10, ஜூலை 2018 8:38:46 PM (IST)

சென்னையில் ப.சிதம்பரம் வீட்டில் திருடியதாக இரு பணிப்பெண்கள்  கைது செய்யப்பட்டனா்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. சிதம்பரத்தின் பாதுகாப்பு கருதி, 24 மணிநேரமும் இந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவா் வீட்டின் அருகே சோதனைச் சாவடியும் உள்ளது.இந்நிலையில், சிதம்பரத்தின் குடும்பத்தினா் அண்மையில் அந்த வீட்டில் பீரோவில் இருந்த நகை மற்றும் விலை உயா்ந்த பொருள்களை சரி பாா்த்தனா். அப்போது அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள்,பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். 

இது குறித்து சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையின் ஒரு பகுதியாக சிதம்பரம் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களே திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வீட்டில் வேலை செய்து வந்த கோடம்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வெண்ணிலா (45), அவரது சகோதரி .விஜி (50) ஆகிய இருவரையும் பிடித்து போலீஸாா், செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா்.விசாரணையில் அவா்கள் தான், திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வெண்ணிலாவையும், விஜியையும் கைது செய்து, அவா்களிடமிருந்து திருடப்பட்ட தங்க,வைர நகைகளையும், பட்டுப்புடவைகளையும் போலீஸாா் மீட்டனா். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory