» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 10, ஜூலை 2018 12:41:16 PM (IST)

மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழில் நீட் தேர்வெழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தாக்கல் செய்த மனுவில், "மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள். தமிழில் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. 

எனவே ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் என தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தமிழில் தேர்வெதிய சுமார் 24,000 மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 196 கருணை மதிப்பெண்களை வழங்கி, மருத்துவப் படிப்புக்கு 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 வாரத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் பதிலளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory