» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 5, ஜூலை 2018 5:50:54 PM (IST)

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம்  கூறி உள்ளது. கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை முதலில் போலீசார் கடைபிடிக்க வேண்டும். கேரளாவை போன்று தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளன அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 


மக்கள் கருத்து

rajaJul 7, 2018 - 12:10:00 PM | Posted IP 162.1*****

நீதிமன்றத்க்கு வேறு வேலேயே கிடையாதா ?

nannJul 5, 2018 - 08:36:50 PM | Posted IP 162.1*****

சூப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory